ஆதரவாளரும் அக்கட்சிக்கான பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டவரும் தற்போது வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவராக உள்ள எம்.ஆனந்தராஜா தற்போது அகில இலங்கை மக்கள் முன்னனி என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் அதற்காக பட்டதாரிகளை இணைத்து தாம் இதனை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
அண்மைக்காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் தாமும் தமது சங்கமும் ரிசாட் பதியுதீனுக்கு பல வழிகளிலும் ஆதரவு வழங்கியதாகவும் எனினும் தேர்தலின் பின்னர் அமைச்சரினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் இதனால் ஏற்பட்ட முரண்பாட்டினாலும் விரக்தியினாலுமே தாம் இம் முடிவை எடுத்திருப்பதாவும். தெரிவித்ததுடன் சுமார் பத்து வருடங்களாகவே புதிதாக தாம் ஒருகட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தனக்கு இருந்ததாகவும் தற்போதே அது கைகூடியிருப்பதாவும் அவர் தெரிவித்தார் .
எனினும் இவ்விடையம் தொடர்பான பின்புலம், உண்மைத் தன்மையினை எமது உண்மை செய்திகளின் செய்திப்பிரிவு ஆராய்தபோது சிக்கிக் கொண்ட விடையம் இதுவே .
அண்மைக்காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் வன்னி மாவட்ட தமிழ் மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ரிசாட்பதியுதீன் தேர்தலில் வெற்றி பெற்றார்.
எனினும் அவரின் வெற்றிக்குப் பின்னர் அவரை நம்பி வாக்களித்த மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் செயல் நிலைப்படுத்தப்படவில்லை இது ரிசர்பதியுதீனுக்கு வாக்களித்தவர்களுக்கு முதல் தடவையும் அல்ல.
இதனால் தனது அடுத்த கட்ட நகர்வை நோக்கியுள்ள ரிசர்பதியுதீன் தமிழ் மக்கள் இனி தன்னை நம்பமாட்டார்கள் என்பதை நன்கு விளங்கிக் கொண்டு தனது தீவிர ஆதரவாளன் ஆனந்தராஜா மூலம் இந்த ஆட்டத்தை ஆட இறங்கியிருக்கிறார்.
அண்மையில் நடைபெறவுள்ள பிரதேசசபை தேர்தலில் வெற்றி பெறுவதே இவரின் தற்போதைய இலக்காக உள்ளது இதற்காக ரிசார்ட் பயன்படுத்தும் பகடைக்காயே ஆனந்தராஜா.
ஏனெனின் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து அதனை பதிவு செய்து செயல் நிலைப்படுத்திச் செல்வதென்பது வாய்ப்பேச்சுப் போல் அவ்வளவு எளிதானவிடையம் அல்ல நிதி வளம் என்பது முக்கிய தேவை அதனை ஆனந்தராஜாவுக்கு வழங்குவது யார்???
கட்சியை ஆரம்பிப்பதாகக் கூறியிருந்த மறுநாளே ஆனந்தராஜா அக்கட்சியின் ரீசேட்டுடன் திரிந்திருக்கின்றார். அப்படியாயின் இவ்விடையம் முன்னரே நன்கு திட்டமிடப்பட்டுள்ளது மக்களை மீண்டும் ஒருமுறை ஆனந்தராஜா என்ற விம்பத்தைக் கொண்டு ஏமாற்றி தனது ஆட்டத்தை அரங்கேற்ற ரிசாட் மேற்கொள்ளும் புதிய கட்சி நாடகமே .இவ் ஆனந்தராஜாவின் அகில இலங்கை மக்கள் முன்னனி கட்சி நாடகம்.
0 comments:
Post a Comment