வவுனியா நகரப்பகுதியில் தற்போது வாகனத்தரிப்பிடப் பற்றுச் சீட்டுக்கள் திடீர் திடீரென தோன்றுவதாக மக்கள்; விசனம் தெரிவிக்கின்றனர்
வவுனியா நகரப்பகுதியல் உள்ள வங்கிகள் அரச நிறுவனங்கள் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் இச் சிரமத்தை பெரிதும் எதிர் கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
வவுனியா நகரப்பகுதிகளில் நகர சபைக்குச் சொந்தமான இவ்விடங்களில் பல தனியாருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு வாகன பாதுகாப்பு தரிப்பிடங்கள் என்று இவை நடாத்தப்படுகின்றன எனினும் இவை பாதுகாப்பு தரிப்பிட்ம் எனபதற்கான எந்த அடையாளமும் இங்கு இல்லை
ஆனால் தரிப்பிட பணம் மட்டும் இங்கு சூட்சுமமான முறையில் வசூலிக்கப்பட்டு வருகின்றது. யாராவது தெரியாமல் இங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றால் அதோ கதிதான் தரித்திரம் தானாகவே இவர்களை தொற்றிவிட்டது என்று எண்ண வேண்டியது தான்
எவ்வாறெனின் இப்பகுதிகள் வழமையான இடம் போன்றே காணப்படும் பாதுகாப்புக்கு என்று யாரும் நிற்பதில்லை வாகன பாதுகாப்பு தரிப்பிடம் என்ற பதாதைகளும் இருக்காது. இதனால் சேவை நிலையங்களுக்கு செல்வோர் புறம்போக்கான இடம் என்று எண்ணி வாகனங்களை இங்கு நிறுத்தி விட்டுச் செல்கின்றனர் நிறுத்தி விட்டுச் செல்லும் போது எந்த பற்றுச் சீட்டுக்களும் வழங்கப்படுவதில்லை எவரும் எதுவும் கூறுவதும் இல்லை. ஆனால் மீண்டும் வந்து வாகனத்தை எடுக்கும் போது மட்டும் அங்கு திடீரென ஒருவர் சிட்டை ஒன்றினை நீட்டியபடி இது கட்டண பாதுகாப்பு தரிப்பிடம் என்றும் பணத்தை செலுத்தி விட்டு வாகனத்தை எடுக்குமாறு கூறுவார்
இதனால் பலர் தரிப்பிடத்திற்கான எந்த வசதிவாய்ப்புக்களும் இல்லாமல் எவ்வாறு பாதுகாப்பு தரிப்பிட பணம் வழங்க முடியும் என்று வாக்குவாதப்பட்டுள்ளனர். இதனால் குறித்த நபரால் வாகன உரிமையாளர்கள் கீழ்த்தரமான வார்தைகளால் திட்டப்படுவதுடன் வேறு வழியின்றி பணத்தையும் செலுத்திச் செல்லும் நிலையே காணப்படுகின்றது
மிகவும் நூதனமான முறையில் நடைபெறும் இப் பகல்க் கொள்ளையை வவுனியா நகரசபை அதிகாரிகள் எப்போது கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்.??
வவுனியா நகரசபை அதிகாரிகளே வாகன வரியை மக்களிடம் போலீசாருடன் சென்று அறவிட்டால் மட்டும் போதாது மக்களின் வாகன தரிப்பிற்கும் சிறந்த ஒழுங்குகளை செய்து கொடுக்க வேண்டியது உங்கள் கடமையே.
0 comments:
Post a Comment