வவுனியாவில் நேற்றயதினம் அரச மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்களிடையே ஏற்பட்ட முறுகல்நிலையைத் தொடர்ந்து அரச பேருந்து நடத்துனரின் முறைப்பாட்டின்பேரில் தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டமையினை எதிர்த்து A9 வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்தின் ஊழியர்கள் எமது சாரதி,நடத்துனருக்கு சரியான தீர்வு வேண்டும் , பக்க சார்பற்ற நீதி வேண்டும் , இணைந்த சேவையை முறையாக வழங்கு என பாதாதைகளை எந்திய வண்ணம் கவனயீர்ப்பு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
முதலாம் குறுக்குத்தெருவில் தரித்து நிற்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்ட போதிலும்
இலுப்பையடிச் சந்தியில் தரித்து நீற்கும் உள்ளுர் தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment