உடவளவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனமன்வில பிரதான வீதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உடவளவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 11 மணியளவில் 23 வயதான குறித்த பெண் தனது மூன்றாவது கணவனுடன் மோட்டார் வண்டியில் பயணித்த போது நபர் ஒருவரினால் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பலியான பெண்ணின் இரண்டாவது கணவனே இந்தக் கொலையை செய்திருப்பதாக பொலிஸார் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பெண் 17 வயதிலேயே திருமணமானவர் என்றும் இவருக்கு முதல் திருமணத்தின் மூலம் 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பெண்ணின் இரண்டாவது கணவனும், மோட்டார் வண்டியை செலுத்தி வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக உடவளவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment