அம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவரை அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வஹாப்தீன் நிராகரித்துள்ளார்.
கடந்த மாதம் 28ம் திகதி குறித்த நபர் பெண் ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்தி தனது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் சார்பாக அவரது சட்டத்திரணி ஊடாக பிணை மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் நேற்று (15) இதனை நிராகரித்த நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment