வவுனியா, நெளுக்குளம் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட ஆயுள்வேத மசாஜ் நிலையம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் தீமூட்டியுள்ளார்கள்.
குறித்த சம்பவம் நேற்று இரவு வேளை நடந்துள்ளது. வவுனியா, நெளுக்குளம், குளுமாட்டுச்சந்திப் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகாமையில் இந்த ஆயுள்வேத மசாஜ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையிலேயே இனந்தெரியாத நபர்களால் நேற்று தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் மசாஜ் நிலையத்தின் கதவுகள், கதிரைகள் என்பன தீயில் எரிந்துள்ளன. நெருப்பு எரிவதைக் கண்டவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து தீ வேகமாக பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, குறித்த நிலையத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment