குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி, சுற்றுலா வீசாவில் வந்து வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று இந்தியர்கள் 20/032016 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் ஒருவர் இலுப்பைகடவை பிரதேசத்திலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 33, 38 மற்றும் 56 வயதான நபர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment