குறுகிய அரசியல் லாபங்களின் அடிப்படையில் படைவீரர்களை பழிவாங்க வேண்டிய அவசியம் எதுவும அரசாங்கத்திற்கு கிடையாது என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
படைவீரர்களை தடுத்து வைத்தல் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் ஆகியன சட்டத்திற்கு புறம்பான வகையில் நடைபெறாது என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் எண்ணிக்கைக் குறைக்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment