
சிங்கள மாணவர்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவபீடத்தினுள் நுழைந்து தம்மை தாக்கியதாக தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் தெரிவித்தனர்.
திருகோணமலையைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் கல்முனையைச் சேர்ந்த ஒரு மாணவனும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு மாணவனும் நீலாவணையைச் சேர்ந்த ஒரு மாணவனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும் நாவலப்பிட்டியவைச் சேர்ந்த ஒரு மாணவனுமே தாக்குதலுள்ளானார்கள்.
தங்களுக்கிடையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பகை முற்றியதில் திட்டமிடப்பட்டு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர்
தெரிவித்தார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
For unmainews Ilancheliyan Vanthiyathevan



0 comments:
Post a Comment