ரங்கல – வேரப்பிட்டிய பகுதியில் புதையல் தோண்டிய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய தகவலொன்றின் பிரகாரம் இந்த சந்தேகநபர்களை நேற்றிரவு கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்தெனிய, கல்கொட்டுவ, கரல்லியத்த மற்றும் வத்தேகம பகுதிகளைச் சேர்ந்தவர்களே புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்களிடம் இருந்து பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சநதேகநபர்களை தெல்தெனிய நீதவான் முன்னிலையில் இன்று (25) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment