மாஸ்கோ: துபாயில் இருந்து வந்த விமானம் ரஷ்யாவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் 7 விமான ஊழியர்கள் உட்பட 62 பேர் பலியாயினர்.பிளை துபாய் எப் இசட் 981 என்ற விமானம் துபாயில் இருந்து ரஷ்யா வந்தது. தெற்கு ரஷ்யாவில் உள்ள ரோஸ்டாவ் ஆன் டான் விமான நிலையத்தில் இறங்கும் போது விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக உரிய வெளிச்சம் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக விமானம் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் 55 பயணிகளும், 7 விமான ஊழியர்களும் இருந்ததாகவும் அனைவரும் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய விமான துறை செய்தி தொடர்பாளர் கூறினார்.
0 comments:
Post a Comment