சிறு­மி­யை கற்பம்! பூசகருக்கு ஏப்பிரல் 5ம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில்

sfhgfhjfஅம்­பாறை மாவட்­டத்தின் கோமாரி பிர­தே­சத்தில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம்  செய்­யப்­பட்­டுள்ள சம்­பவம் தொட ர்பில் வயோ­திப பூசகர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொத்­துவில் பொலிஸார் தெரி­வித்­தனர்.



பொத்­துவில் பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கோமாரி மணல்­சேனை பகு­தியைச் சேர்ந்த 65 வயது நிரம்­பிய பூச­கரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.



பிர­தே­சத்தைச் சேர்ந்த 16 வய­து­டைய சிறுமி ஒரு­வ­ருடன் தொடர்­பு­களை வைத்­தி­ருந்த குறித்த பூசகர் இச்­சி­று­மிக்கு ஆபாச வார்த்­தை­களைக் கூறி பழகி வந்­துள்­ள­தோடு பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திலும் ஈடு­பட்­டுள்ளார்.



பின்னர் இச்­சி­று­மிக்கு ஏற்­பட்ட வயிற்று வலி­யி­னை­ய­டுத்து தாயார் இச்­சி­று­மியை பொத்­துவில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­ததைத் தொடர்ந்து வைத்­தி­யர்கள் மேற்­கொண்ட உடல் பரி­சோ­த­னைக்­கி­ணங்க சிறுமி தாய்மை அடைந்­தி­ருக்­கின்ற விடயம் தெரி­ய­வந்­துள்­ளது. சிறு­மியின் தாயார் பொத்­துவில் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பா­டு­க­ளுக்­க­மைய பூசகர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.



இவர் ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி வரை இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com