அத்துடன் சிரியாவில் செயற்படும் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ள நாற்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களும் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகம் பூராகவும் தடை செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். இணையத்தளங்களுக்கு இலங்கையில் இருக்கும் அதன் ஆதரவாளர்கள் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி பிரவேசிக்கும் வசதி இன்னும் காணப்படுகின்றது.
அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும் அவர்களைக் கைது செய்யவும் முடியவில்லை. அதற்கான காரணம் இலங்கையில் குறித்த அமைப்பு இதுவரை தடை செய்யப்படாமையே ஆகும்.
இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் பெற்றுச் செல்வோர் மற்றும் மாலைதீவிலிருந்து இலங்கை வருவோர் ஆகிய தரப்பினர் மூலமாகவே ஐ.எஸ். பயங்கரவாதம் இலங்கையில் பரவிக் கொண்டிருக்கின்றது என்றும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment