இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மன்னார் கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் கைது
செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் ஒரு ட்ரோலர் படகுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
அத்துடன் மேலும் 3 சிறுமீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் தென்பகுதியில் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களை கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
0 comments:
Post a Comment