மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உட்பட 29 பேர் தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க தவறிய குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் மைத்துனி எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வர்ணாதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
மாங்குளம் – நெரியகுளம் பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தற்கொலை குண்டுதாரிக்கு தங்குமிட வசதிகளை வழங்கியமை சம்பந்தமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், பிரதான சந்தேக நபரின் சகோதரியையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment