டி20 தொடரில் இலங்கை அணி இங்கிலாந்திடம் தோல்வி!

hxhjடி20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி  அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

 


டி20 உலகக்கிண்ணத் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 10 போட்டியின் குருப் 1ல் இங்கிலாந்து இலங்கை அணிகள் இன்று டெல்லி பெரோஷ் கோட்லா மைதானத்தில் மோதின.



இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்ததையடுத்து இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்களைப் பெற்றது.



எனினும் 172 வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.



About the Author

unmainews.com

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

0 comments:

Post a Comment


iklan

 

Copyright © Unmainews. All rights reserved. Template by CB Blogger & Templateism.com