டி20 உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணி 160 ஓட்டங்கள் எடுத்துள்ளது
அவுஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்சும், கவாஜாவும் அதிரடியாக ஆடி பும்ரா வீசிய 2-வது ஓவரில் கவாஜா நான்கு பவுண்டரிகள் அடித்துள்ளார்.
அஸ்வின் வீசிய 4-வது ஓவரில் பின்ச் 2 சிக்ஸ் அடிக்க அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
அந்த அணி 4 ஓவரில் 50 ஓட்டங்களை தொட்டது.
5-வது ஓவரில் நெஹ்ரா கவாஜாவை 26 ஓட்டங்களில் வீழ்த்தினார். அதன் பிறகு இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி ஓட்டங்களை வேகத்தை கட்டுப்படுத்தினார்கள்.
வார்னரை 6 ஓட்டங்களில் அஸ்வின் விழ்த்தினார்.
அணித்தலைவர் சுமித்தை 2 ஓட்டங்களில் யுவராஜ் வீழ்த்த அவுஸ்திரேலியா தடுமாற ஆரம்பித்தது.
பின்ச் மற்றும் மேக்ஸ்வெல் அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்கள். ஆனால் பின்ச் 43 ஓட்டங்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.
மேக்ஸ்வெல் 31 ஓட்டங்களில் பும்ரா பந்தில் போல்ட் ஆனார்.
இறுதியில் அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய தரப்பில் அற்புதமாக பந்து வீசிய நெஹ்ரா 4 ஓவர்கள் வீசி 20 ஓட்டங்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பாண்டிய இரண்டு விக்கெட்டும், யுவராஜ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.
161 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களத்தில் உள்ளது.
0 comments:
Post a Comment