ஆண்களை விட அதிகமாக ரொமான்ஸ் வெளிப்படுத்துவது பெண்கள் தான். மேலும், உணர்ச்சியின் பாலும், காதலாலும் அதிகமாக தாக்கம் ஏற்படுவதும் அவர்களுள் தான். ஆனால், பெரும்பாலான பெண்கள் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
சின்ன, சின்ன செயல்பாடுகளால் தான் தங்கள் காதலை பெண்கள் வெளிப்படுத்துகிறார்கள். அதிலும் பலர் தனிமையில் தான் தங்கள் காதலை அதீத அளவில் கொட்டித் தீர்க்கிறார்கள். அதில் காதலனுக்காக, அவர்கள் முன்பு பெண்கள் விரும்பி செய்யும் 11 காரியங்களை குறிப்பிட்டு கூறலாம்…
சோம்பல் முறிப்பது
காதலன் முன்பு ஓரக்கண்ணால் ஓர் பார்வையை வீசியப்படி, சோம்பல் வெட்டி முறிப்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதில் ஒரு செல்லமான செய்கையும் அடங்கியிருக்கும்.
காதலனின் சட்டையை உடுத்துவது
தனிமையில் துணையின் சட்டையை அணிந்துக் கொண்டு வீட்டில் உலா வருவது பெரும்பாலும் எல்லா பெண்களுக்கும் பிடிக்கும்.
அதீத பிரியத்தை வெளிப்படுத்துவது
பெண்களுக்கு எப்போதுமே தங்களுக்கான பொருள்கள் மீது அதீத பிரியம் இருக்கும். அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். காதலில் பலநூறு மடங்கு பிரியத்தை பெண்கள் வெளிப்படுத்துவார்கள்.
பின்னாடி இருந்து அணைத்துக் கொள்வது ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் கூட மிகுதியான காதல் வெளிப்படும் போது பின்னாடி இருந்து கட்டியணைத்துக் கொள்வது மிகவும் பிடிக்கும்.
வேலைக்கு இடையே குறுஞ்செய்தி
வேலைக்கு மத்தியில் ஐ லவ் யூ, உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன் போன்ற குறுஞ்செய்திகள் அனுப்புவது.
ஃபேஸ்புக்கில் தற்பெருமை
ஃபேஸ்புக்கில், காதலன் பற்றி மறைமுகமாக தற்பெருமையுடன் பதிவுகள் இடுவது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாகும்.
எதிர்பாராத முத்தம்
பெண்களிடம் கேட்டதும் கிடைக்கும் முத்தங்களை விட, எதிர்பாராத தருணத்தில் கிடைக்கும் முத்தங்கள் தான் அதிகம். இதில் தான் கிக்கும் அதிகம்.
பரிசுகள்
பெரும் விலையாக இல்லாவிட்டாலும், சின்ன சின்ன பரிசுகளை அவ்வப்போது கொடுப்பது பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்.
தோள்களை பிடித்துவிடுவது
தோள்களை, கைகளை பிடித்துவிடுவது போன்று ஏதேனும் நோண்டிக் கொண்டிருப்பது பெண்கள் காதலனுக்கு பிடிக்கும் என விரும்பி செய்கிறார்கள்.
வாட்ஸ்-அப்
உங்கள் பெயரை ஸ்டேடஸாக வைப்பது, புகைப்படத்தை டி.பி-யாக வைப்பது / வாட்ஸ்-அப் வால்பேப்பராக வைப்பது போன்றவை இந்த காலத்து யுவதிகள் விரும்பி செய்கிறார்கள்.
என்ன மொக்கைப் போட்டாலும் கேட்பது
நீங்கள் என்ன தான் பேசியதையே திரும்பி பேசினாலும், மொக்கைப் போட்டாலும், உங்கள் முகபாவத்தை விரும்பி பார்த்துக் கொண்டே ரசித்து கேட்பது.
0 comments:
Post a Comment