கடந்த இரண்டு மாதங்களுக்குள் சுமார் 10,500க்கும் அதிகமான டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் கடந்த இரு மாதங்களுக்கு டெங்கு நோய்க்குள்ளான 12 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றாநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியநிபுணர் டொக்டர் பபா பலிஹவடனே தெரிவித்தார்.
நாட்டில் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் டெங்கு நுளம்பினை ஒழிக்கும் வேலைத்திட்டத்தினை எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேல்மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், எதிர்வரும் 29 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதிவரை டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்படுத்தப்படவுள்ளதாகவும் வைத்தியநிபுணர் டொக்டர் பபா பலிஹவடனே சுட்டிக்காட்டினார்.
இந்த காலப்பகுதியில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஒன்றினைந்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை ஒழிப்பதற்கான நடவடிவக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment