ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்ற ஆரம்பிக்கும் போதும் உரையை முடிவுக்கும் போதும் ஆளும் தரப்பினர் மட்டுமல்லாது கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் கரகோஷம் செய்தமை ஒரு விசேட அம்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உரையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, உரைக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துக்களை சிரித்தவாறு கூறிக்கொண்டிருந்தார்.
1978ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் ஆர்ப்பாட்டத்தில் தானும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் கூறிய போது, அந்த ஆர்ப்பாட்டம் புறக்கோட்டையில் நடந்ததாக தினேஷ் குணவர்தன கூறினார்.
ஜனாதிபதி அரசியலமைப்பு நிர்ணய சபையை ஏற்படுத்தும் யோசனையை முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் இறுதியில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கரகோஷம் செய்து தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர்.
இவ்வாறு மகிழ்ச்சியை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, வாசுதேவ நாணயக்கார உட்பட கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் அடங்குகின்றனர்.
0 comments:
Post a Comment