அன்மைக்காலமாக அதிகமாக பேசப்படும் அல்லது விவாதிக்கப்படும் விடயமாக "தமிழ் மக்கள் பேரவை" அமைந்துள்ளதை அவதானிக்கும்போதும் இந்த பேரவைக்கான பெருகிவரும் ஆதரவினையும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தினையும் பார்க்கும் போதும் பெரும்பாலான தமிழ் மக்கள் இனப்பிரச்சனை தொடர்பில் தமது பங்களிப்பின் ஊடான இறுதியும் உறுதியுமான முடிவினை காலக்கிரமத்தில் ஏற்படுத்த சரியான தளத்தை எதிபார்த்து காத்திருப்பது புலப்படுகின்றது. இதுவே எமது நிலைப்பாடாகவும் இருப்பதுடன் இது தொடர்பில் நாமும் ஆர்வமாக அவதானித்து வருகின்றோம்.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தீர்வு என்பது எந்தவித முன்னேற்றங்களும் இன்றி என்னும் ஆதாள
பாதாளத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது தமிழ் மக்களின் பிரச்சனையினை திரிசங்கு நிலையில் வைத்துக்
கொண்டு தமது காலத்தை கழித்துக்கொள்ள நினைக்கும் தற்போதைய தலைமைகளின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும், எங்களுக்கு வேண்டிய தீர்வு இதுதான் எனும் தெளிவான வரைபினை முன்வைத்து அதுதொர்பான அரசின் முடிவினை வினவுவதுடன் எமது நிலைபாட்டை சர்வதேசத்திடம் விளக்குவதற்கும், பெரியண்ணன் போக்கில் தமிழர் தொடர்பான முடிவுகளை தாங்கள் மட்டும்தான் எடுக்கமுடியும் என எண்ணி செயற்படும் நிலையினை மாற்றியமைப்பதற்கும், இதுவரை யுத்த வடுக்களை மட்டுமே சுமந்த இனமாக பாதை மாறிப் போய்க்கொண்டிருக்கும் எமது இனத்தினை நல்வழிப் படுத்துவதற்கும்
அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் , சமயத்தலைவர்கள், சிவில் சமூகத்தினர்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் போன்றோரை ஒன்றிணைத்து சரியான முடிவினை மட்டுப்படுத்தப்பட்ட கால எல்லைக்குள் எடுக்கவேண்டிய சூழலில் அதற்கான முயற்சியினை மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் அவர்களின் இணைத்தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினைஅரசியல் பிளவாகப் பார்க்காமல் காலத்தின் தேவை அறிந்து ஊக்குவிப்பதே பொருத்தமானதாக இருக்கும் அதைவிடுத்து அரசியல் சுயநலம் கருதியும் என்னும் பல தேர்தல் வெற்றிகளை இலக்காக கொண்டும் அதில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தி துரோகிகளாக்கி ஓரம்கட்டிவிடலாம் என நினைப்பதும், பேரவை தொர்பான வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் பொருத்தமற்றது தங்களால் செய்யமுடியாத அல்லது செய்ய முயலாத ஒரு செயலை வேறொருவர் செய்ய முனையும்போது அவர்களை ஊக்குவித்து அதனூடாக என்னும் பலம்பெற நினைப்பதை விடுத்து நாம் செய்யாத ஒன்றை வேறு யாரும் செய்துவிடக்கூடாது
என குழப்புவதும் இதுவரை கூட இருந்து மக்களுக்காக உழைத்தவர்களையும், உங்கள் வெற்றிக்காக பாடுபட்டவர்களையும், உங்களால் செயல் வீரர்களாக காட்டப்பட்டவர்களையும் திடிரென துரோகிகளாக்கி விடுவது என்னும் காலம் காலமாக கையாண்டுவந்த சூத்திரத்தையே பயன்படுத்த முயல்வது என்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் மக்கள் மத்தியில் எடுபடும் என்பதும் சந்தேகம்தான். எனவே களத்தின் போக்கை உணர்ந்து காலத்தின் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் பேரவையினை பலப்படுத்தி அனைத்து தமிழ் கட்சிகளையும், அமைப்புக்களையும் ஒன்றிணைத்து துரித கதியில் தமிழ் மக்களுக்கான இறுதி முடிபெடுப்பதன் மூலம் அடுத்த சந்ததியிடமும் இனப்பிரச்சனை எனும் பூதத்தை வழங்கிவிட்டு செல்லாமல் பார்த்துக்கொள்ள ஒன்றினைவோம். .
அதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டு குழுவினரும் அனைவரது பங்களிப்பினையும் வெறும் பேச்சளவில் மட்டும் வைத்துக்கொண்டு ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக செயற்படாமல் மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்ளும் அதேவேளை எடுத்தமுடிவில் உறுதியாக செயற்பட்டு இறுதிவரை பயணிக்க வேண்டுவதோடு தமிழ் மக்களின் அரசியல் பலமும் குறைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இம்முயற்சிகள் இறுதியில் குட்டையை குழப்பி பருந்தின் கையில் கொடுப்பது போன்று அமைந்து விடக்கூடாது என்பதே எமதும் பெரும்பாலான தமிழ் மக்களினதும் கோரிக்கையாகும் .
நன்றி.
ப.உதயராசா
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ
0 comments:
Post a Comment