இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவங்கள தொடர்பில் விசாரணைகளை விரைவு படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டு 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பிலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment