முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மக்களின் காணிகளுக்கு பதில் காணி வழங்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் காணிகளை சிங்கள மக்களிற்கு கையளிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் தமது வயல் காணிகளில் அவர்கள் நெற்செய்கையில் ஈடுபடுவதாகவும் தாம் பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காணி தொடர்பான பிணக்குகள் எனின் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு பதிலாக சம்பத்நுவர பிரதேச சபையில் தெரிவிக்குமாறு மக்களிற்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளனர்.
தனிச்சிங்கள பிரதேசம் என்பதால் தமக்கு மொழி பிரச்சினை உள்ளதாகவும் தமிழ் மாவட்ட செயலகம் முல்லைத்தீவில் உள்ளபோதும் தம்மை சிங்கள பிரதேச செயலகத்துடன் எதற்காக இணைத்து கொள்கின்றார்கள் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
0 comments:
Post a Comment