மகிந்தாவின் மகன் கைது செய்யப்பட்டு விட்டார் என் தமிழ் மக்கள் மகிழ்ச்சியில் இருப்பதும் மகிந்தாவுக்கு ஏற்பட்ட ஏதோ தண்டனை போல் கருதுகின்றனர்.உண்மையில் ஏன் மகிந்தாவின் மகன் கைதுப்செய்யப்பட்டார் என்பது பற்றிய விளக்கம் இன்மையே.!
01: மைத்திரி தன் கட்சி தலமையினை காப்பாற்ற எடுத்த நடவடிக்கை.!
02: நாட்டில் சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கு என்பதினை காட்டவே..!
03: மிகபெரிய கொலை குற்றங்களில் இருந்து காப்பாற்றவே..!
கைது செய்யப்பட்டவர் குறுகிய காலத்தில் வெளியில் வந்துவிடுவார் என்பதில் ஐயம் இல்லை.! அதை விட சிறையில் இருக்கும் காலத்தில் சுகயீனம் என்று வைத்தியசாலையிலே காலத்தை கழிப்பார்.!
முன்னர் பசில் இதுபோன்றே கைது செய்யப்பட்டு வெளியில் வந்தார்.
தமிழ் உறவுகள் சிறையில் அனுபவிப்பது போலவா இவர்கள் அனுபவிக்க போகின்றார்.?
சிலர் கருதுகின்றனர் மகிந்தாவின் மகனை கைது செய்து மகிந்தாவை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து தமிழருக்கு தீர்வை மைத்திரி கொண்டுவர செய்யும் செயல் என கருதுகின்றனர்.! உண்மையில் இவை அவ்வாறு அமையாது மாறாக சிங்கள் மக்கள் மத்தியில் மகிந்தாவுக்கு அனுதாப அலையினையே ஏற்ப்படுத்தும்.!
இறுதியில் எமக்கு தான் எல்லாம் பாதகமாக அமையும். எனவே நாம் மகிழ்ச்சியில் இருப்பது பயனற்ற ஒன்றே..!
0 comments:
Post a Comment