அண்மைக்காலங்களாக தமிழர் தாயக பிரதேசங்களில் கலாச்சார சீரழிவுகள் கராணமாக தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் ,குடும்ப பிரிவுகளும் எண்ணிக்கையளவில்
அதிகரித்து வருகிறது ஆயுதங்களைவிட ஒரு இனத்தை குறுகிய காலத்துக்குள் அழித்து விடக்கூடிய கலாச்சார சீ{ரழிவுகளிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும்.
அதிகரித்து வருகிறது ஆயுதங்களைவிட ஒரு இனத்தை குறுகிய காலத்துக்குள் அழித்து விடக்கூடிய கலாச்சார சீ{ரழிவுகளிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும்.
அதிகரித்து வருகின்ற சமூக வலைத்தளங்களின் பாவனை, சிறு பராயக் காதல் , வேலை வாய்ப்பின்மை , வெளிநாட்டு திருமணங்கள் போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்ற சமுதாய சீரழிவினால் இளவயது தற்கொலைகள் அதிகரித்துள்ளதுடன் பல குடும்பங்கள் சீரழிந்து நீதிமன்ற வாசல்களில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவற்றில் சில சம்பவங்கள் ஊடகங்கள் மூலம் வெளிவந்தாலும் அதிகமான கிராமப்புறங்களில் ஏற்படும் சம்பவங்கள் வெளிவருவதில்லை கடந்த ஒருசில மாதங்களில் மட்டும் வடக்கு மற்றும் கிழக்கில்
இவ்வாறான பலசம்பவங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பாக கடந்த 17.01.2016 அன்று வவுனியா, கற்குளம் 01 எனும் கிராமத்தில் இடம்பெற்றசம்பவமொன்றில் 14 வயதுடைய சிறுமி சிறுவயது காதல் காரணமாக தற்கொலை செய்துள்ளதுடன் இவருடன் இணைந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டுமுள்ளார்.
இதுதவிரவு முகநூல் போன்ற சமுக வலைத்தளங்களில் போலிக் கணக்குகளை திறந்து நடத்திவரும் சில சமுக விரோதிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டு பலர் தற்கொலை செய்துள்ளதுடன் சிலர் தற்கொலை முயற்சிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறன நிலை தொடருமானால் எமது இனம் பாரிய அழிவை சந்திக்க வேண்டிய அபாயத்தை நோக்கி தள்ளப்படும் .
இந்த அபாயத்தில் இருந்து எமது மக்களை மீட்க பாடசாலைகள் முதல் சமூக அமைப்புக்கள், காவல்துறை, அரசியல் கட்சிகள், பெண்கள் நலன்சார் அமைப்புக்கள் போன்றனவும் களத்தில் இறங்கி செலாற்ற வேண்டும். கலச்சரார சீரழிவுகளில் இருபாலாரும் சம்மந்தப்பட்டுள்ள போதிலும் இதனால் பாதிக்கப் படுபவர்கள் அதிகமாக பெண்களாகவே இருப்பதனால் பாடசாலையில் சாதாரண தரம் உயர்தரம் போன்ற பிரிவுகளில் படிக்கின்ற மாணவர்கள் முதல் யுவதிகள், குடும்பபெண்கள், விதவைகள் என அனைத்து தரப்பினர்களுக்குமான விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
குறிப்பாக அரசியல் வாதிகள் வெறும் தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தமக்கு வாக்களிக்கின்ற சமூகத்தின் மேம்பாடு பற்றியும் சிந்தித்து செயற்பட வேண்டும் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் தமக்கிருக்கும் சிறப்புரிமைகளை பயன்படுத்தி சட்டத்திற்குட்பட்டு நீதித்துறையின் உதவியோடு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்
அரசாங்கமும் சமூக நலன் சார்ந்த அமைச்ச்சு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி விழிப்புணர்வு கருத்தரங்கங்களை மேற்கொள்ள வேண்டுவதுடன் ஊடகங்களும் தமது பங்கிற்கு சமுதாய சீரழிவுகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நல்வழிப்படுத்த வேண்டும்.
இவ்வாறாக அனைத்து தரப்பினரும் தமது பொறுப்பை உணர்ந்து ஆக்கபூரவமாக செயற்படுவதன் மூலம் எமது இனத்தின் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதுடன் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுத்துநிறுத்த முடியும் .
நன்றி .
ப. உதயராசா
செயலாளர் நாயகம்
ஸ்ரீ ரெலோ
0 comments:
Post a Comment