போரினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசாங்கம் பல திட்டங்களை முன்வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த மாநாட்டில் பன்னாட்டு நிதி நிறுவனங்களும் வல்லுநர்களும் கலந்து கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஆதரவளித்துள்ளனர்.
எனினும் இலங்கையில் நிலையான பொருளாதாரக் கொள்கை இல்லாத சூழலில் இந்த மாநாட்டின் முடிவுகள் எந்த அளவுக்கு வெற்றியளிக்கும் என்பது குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.
கண்டி நகரை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்த மாநாட்டில் ஆய்வு
2014ஆம் ஆண்டு முதலே இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில்தான் உள்ளது என்று இந்த மாநாட்டில் பங்குபெற்றவரும், பொருளாதார வல்லுநருமான டாக்டர் முத்துகிருஷ்ணன் சர்வானந்தன் தெரிவித்தார்.
இலங்கையின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் அந்நிய செலாவணி குறைந்தது போன்றவை நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதித்துள்ளன எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கையில் வருமானத்துக்கு ஏற்றவகையில் நகரமயமாதல் நடக்காத சூழ்நிலையில், கொழும்பு நகரைத் தவிர கண்டி, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற நகரங்களின் வளர்ச்சி குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாகவும் முத்துகிருஷ்ணன் சர்வானந்தன் கூறுகின்றார்.
நாட்டின் பல மாவட்டங்கள் பின் தங்கியுள்ளன என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டின் பின் தங்கியுள்ள மாவட்டங்களையும் பொருளாதார வளர்ச்சியில் எவ்வாறு உள்வாங்குவது என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment