மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம்.
1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதிப்படுத்த எந்த ஒரு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.
சமூக வலைத்தளத்தில் பரவிய செய்தி
0 comments:
Post a Comment