ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு அது தொடர்பில் ஆராய்ந்து வருவதோடு. இந்த சட்டத்திற்கு பதிலாக மாற்று சட்டமொன்றை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருவதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவில், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சு மற்றும் நீதியமைச்சசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் சட்டவாக்க ஆணைக்குழுவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் பயங்கரவாத தடைச் சட்டம் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின்போது, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் தெடர்பில் ஆராய்ந்து அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், சர்வதேச நியமங்களுக்கு அமைய தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment