வவுனியா மூன்று முறிப்பில் அமைந்துள்ள சர்வோதயம் எனும் நிறுவனம் மக்கள் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள ஊழலுக்கு எதிரான சட்ட உதவி மையமான நேர்மையின் புகலிடம் அமைப்பினரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது சர்வோதயம் எனும் நிறுவனமானது சுயதொழில் செய்வதற்கு 5 இலட்சம் ரூபா மானியமாக வழங்கப்படும் எனக் கூறி ஒருவர் 2000 ரூபா வீதம் முற்பணமாக வழங்கவேண்டும் என தெரிவித்து பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. புதுக்குளம், செட்டிகுளம், நாகர்இலுப்பைக்குளம், உலுக்குளம் பகுதியை சேர்ந்தவர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டு மோசடி நடந்திருப்பதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment