வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம் ,தமிழ் விருட்சம் ,கலை ,இலக்கிய நண்பர்கள் வட்டம் இணைந்து ஏற்பாடு செய்த ஆறுமுகநாவலர் பெருமான் நினைவு தினம் 05.12.2015 இன்று காலை 8.30 மணிக்கு வவுனியா இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள ஆறுமுகநாவலர் சிலை அடியில் திரு ஐ.கதிர்காமசேகரன் ஆசிரியர் தலைமையில் இடம் பெற்றது .
இந்த நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் ,மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ் .வாசன் ,முன்னாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன் ),மத்தியஸ்தர் சபை தலைவரும் ,அதிபருமான சி.வரதராசா ,தேசமான்ய க.சிவஞானம் .செ.தேவராசா ,வர்த்தகர்கள் ,விக்னா .சிவசுப்ரமணியம் ,நந்தன் ,முற்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவி ,தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,தேசபந்து இ.கௌதமன் ஆகியோருடன் சி .சி.டி.எம் .எஸ் பாடசாலை மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
மாலை அணிவித்தும் ,மலர் தூவியும் ஆறுமுக நாவலர் பெருமானுக்கு வணக்கம் செய்த பின்
ஆறுமுகநாவலரின் பெருமைகள் பற்றி ஐ.கதிர்காமசேகரன் ஆசிரியர் உரையாற்றினார் .அவர் குறிப்பிடும் போது ஐந்தாம் சமய குரவராக போற்றப்படும் ஆறுமுகநாவலர் பெருமான் பாதிரியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க பைபிளை தமிழ் மொழி பெயர்த்து கொடுத்தார் என நயம்பட உரையாற்றினர் .
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கம் முன்னெடுக்கும் தத்தளிக்கும் தமிழக உறவுகளுக்கு கை கொடுப்போம் என்ற சொல்லுக்கு இணங்க தேசபந்து இ.கௌதமன் அவர்களாலும் ,தமிழ் விருட்சத்தாலும் ஒரு தொகுதி உலர் உணவு பொதி ஊடகவியலாளர் காந்தனிடம் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது .
0 comments:
Post a Comment