முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனை படுகொலை செய்த சூத்திரதாரி இந்தச் சபையில் தான் இருக்கிறார் என்று நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா. நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுதலை செய்தபோது எதுவும் கூறாதவர்கள் இப்போது சிறைகளிலுள்ள 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு எதிராக பேசுகின்றனர். இந்த விடயத்தில் எதிர்க்கட்சியிலுள்ள ஒருசில இனவாதிகளுக்காக எமது தமிழ் மக்களை அரசு பணயம் வைக்கவேண்டாம்.
ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன், லசந்த விக்கிரமதுங்க, நிமலராஜன் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் சரியாக முடியவில்லை. மகேஸ்வரன் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுத்தவர். அவருக்கு வழங்கப்பட்டிருந்த 15 மெய்ப்பாதுகாவலர்களையும் கடந்த கால அரசு நீக்கியது. இப்படி செய்ய உத்தரவிட்ட அதிகாரிகள் யார்? இது குறித்து விசாரணை செய்யவேண்டும். மகேஸ்வரனை படுகொலை செய்த சூத்திரதாரி இந்தச் சபையில் இருக்கிறார். அவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
இதற்காக மகேஸ்வரன் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் இடம்பெற வேண்டும்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
0 comments:
Post a Comment