திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் தலையில் காயங்களுடன் கரையொதுங்கிய சடலமொன்றை இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம் அன்புச்செல்வன் (48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா, கொட்டியாரக்குடா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (25) தனது நண்பர்கள் இருவருடன் சென்ற இவர், ஆற்றில் வலையை வீசி விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுள்ளதா எனப் பார்வையிடச் சென்றபோதே இவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் இவரைத் தேடும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இவரது சடலம் கரையொதுங்கியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
ஏனைய இருவரிடமும் விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment