கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றிய தயாமோகன், 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்த பின்னர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் அவர் இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு நேற்று சனிக்கிழமை ஸ்கைப் வழியாக வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காலம் காலமாக சிங்களத் தலைவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றமை வரலாறு எனவும் அந்த வரலாற்றை மூடி மறைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்காவில் ஒரு வன்போக்கு அரசியல்வாதியின் ஆட்சி முடிந்து மென்போக்கு அரசியல்வாதியின் ஆட்சி ஆரம்பமாகியுள்ளது. இந்த மென்போக்கு அரசியல்வாதியின் ஆட்சிக்காலத்திலேயே தமிழர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். இதனை விரைவில் அனைவரும் கண்டறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை கொண்டே ஸ்ரீலங்காவில் இனப்படுகொலை நடந்தமைக்கான சான்றுகள் இல்லை என அரசாங்கம் தெரிவித்து தற்போது ஆட்சி செய்து வருகின்றது.
மென்போக்கு அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு உலகத்தை தங்கள் பக்கம் ஈர்த்து, தமிழர்களின் இருப்பை இல்லாமல் செய்வார்களே ஒழிய, தமிழர்களுக்கு எந்தவிதமான தீர்வையும் வழங்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தை பயன்படுத்தி, ஜனநாயக சரத்துக்கு அமைவாக தாம் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மன்னார் மாவட்டம் மறைமாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகை கூறியது போன்று ஒரு லட்சத்து ஐம்பத்து ஆறு ஆயிரம் பேர் இறுதி யுத்ததில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த தயாமோகன், இறுதிக்கட்ட யுத்ததில் இந்திய இராணுவம் தொழில்நுட்ப ரீதியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு உதவி வழங்கியதுடன் நேரடியாக களத்தில் நின்றதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நீண்டகாலமாக படைத்தளபதியாக இருந்து வழிநடத்திய கருணா இராணுவ, தொழில்நுட்ப, படைபல இரகசியங்களை ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு வழங்கியமையினால் தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னடைவை எதிர்நோக்கியதாகவும், கருணாவின் காட்டிக்கொடுப்பு இந்தப்போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தது எனவும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment