2016ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது.
வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 14ஆவது நாள் விவாவம் இன்று இடம்பெறுவதுடன் விவாதத்தின் இறுதி நாள் நாளையாகும்.
அதன்படி வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை பாராளுமன்றிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 2ஆம் திகதி இடம்பெற்றதுடன் அது மேலதிக வாக்குகளினல் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறாயினும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பல்வேறு தடவை வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் மாற்றங்கள் மேள்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment