இந்திய அரசின் நிதி உதவியில் வவுனியா பொது வைத்தியசாலையில் கட்டப்பட்ட புதிய விடுதி இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
200 படுக்கைகளை கொண்ட புதிய கட்டடம் சிறுவர் விடுதி, பெண்கள் விடுதி என்பவற்றை கொண்டமைந்துள்ளது.
கட்டடத்தினை இலங்கைக்கான இந்திய தூதர் வை.ஏ.சிங்கா திறந்து வைத்ததுடன், அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்,
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, கே.கே.மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள், வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் வைத்திய அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment