முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை நியமிக்கப்படும் போது நோய் வாய்ப்பட்டு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிக்கப்படுபவர்களுக்கு இல்லாத நோய்கள் இருப்பதாக அறிக்கை வழங்கி, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு லஞ்சம் பெறும் வைத்திய அதிகாரிகள் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான அறிக்கை வழங்குவதற்கு ஒரு நபரிடம் 8 முதல் 15 லட்சம் ரூபா வரையில் லஞ்சம் பெறுவதாகவும் அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலை சக வைத்திய அதிகாரிகள் பலரினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
DC
0 comments:
Post a Comment