தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அடுத்த ஜனவரி மாதம் முதல் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கம் தொடர்பான அமைச்சர் டபிள்யு. டீ.ஜே. செனவிரத்ன பாராளுமன்றத்தில் இன்று கருத்துத் தெரிவிக்கும் போது கூறியுள்ளார்.
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் இன்று பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதாக பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment