வவுனியா சுந்தரபுரத்தில் வசிக்கும் மூன்று வறிய மாவீரர் குடும்பங்களுக்கு கனடாவில் வசிக்கும் ராம் சிவா அவர்களின் ராம் பவுன்டேசன் மூலம் தமிழ் விருட்சத்தால் 27.11.2015 இன்று அரிசி ,மா ,சீனி ,பருப்பு ,கிழங்கு ,டின்மீன் என ஒரு மாதத்துக்கு தேவையான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டன .
சுந்தரபுரத்தில் வசிக்கும் ரா.செபமாலை 80 வயது ,தெய்வானை 64 வயது அவர்களின் மகளான மாவீரர் பைந்தமிழ் என்ற தெய்வானை அவர்கள் 2009 இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்தார் ,அவரின் குடும்பத்துக்கும் ,
வே.முருகையா 65 வயது, மு.புனிதவதி 48 வயது அவர்களின் மகளான மாவீரர் செவ்வந்தி என்கிற இருதயமலர் 1998இல் முகமாலை மோதலில் வீர மரணம் அடைந்த அவரது குடும்பத்துக்கும் ,
மு.சிவராசா 68 வயது அமரர் கிருஸ்ணவதி அவர்களின் மகனான மாவீரர் லோகன் என்கிற சுபாஸ்கரன் யாழ்தேவி யுத்தத்தில் வீர மரணம் அடைந்தார் அவரது குடும்பத்துக்கும் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டன .
இந்த மூன்று மாவீரர் குடும்பகளுக்குமான உலர் உணவு பொதிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கு சென்று வழங்கி வைத்தனர்
0 comments:
Post a Comment