கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்து உள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம் செக்ஸ் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய பெண்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் விபசாரம் மிகவும் மலிவாக நடைபெறுகிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது என லண்டன் பத்திரிகை தெரிவித்து உள்ளது.
சில பெண்கள் சில ரொட்டி துண்டுகளுக்காகவும் (சாண்ட்விச்) சில சீஸ் துண்டுகளுக்கும் கூட விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அவ்வளவு பசி பட்டினியில் உள்ளனர் என தனது 3 ஆண்டு ஆய்வில் தெரியவந்து உள்ளதாக ஏதென்ஸ் நகரின் பண்டியோன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிகோரி லோக்சோஸ் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.
கிரீசில் பொருளாதார நெருக்கடி தொடங்கிய போது விபசார அழகிகள் 50 யூரோக்கள் (53 அமெரிக்க டாலர்கள் ) வரை கட்டணம் வாங்கினர். தற்போது அது 2 யூரோக்களுக்கு ( 2.12 அமெரிக்க டாலர் ) வீழ்ச்சி அடைந்து உள்ளதாக லோசோஸ் கூறியதாக லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
நாட்டில் விபசாரத்தில் ஈடுபடும் பெண்களில் 80 சதவீதம் பேர் கிரேக்க பெண்கள் என கூறி உள்ளார். கிரீசில் விபசாரம் சட்டபூர்வமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில நாட்டின் விபசார கூடங்கள் தான் உரிமம் பெற்று உள்ளன. தெருவில் 18,500 விலைமாதர்கள் விபசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த ஆய்வு அறிக்கைகள் வந்த பின்னர் கடந்த மாதம் வேலையில்லாத ஒரு பட்டதாரி தயார் தனது 12 வயது மகளை விபசாரத்திற்காக ஒரு மத குரு மற்றும் ஓய்வுபெற்ற ஒருவருக்கும் விற்பனை செய்து உள்ளார். 44 வயதாகும் அவருக்கு 33 வருட சிறை தண்டனையும், ஒரு லட்சம் யூரோவும் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளதாக அந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது. கிரேக்க பத்திரிகைகள் அந்த பெண்ணுக்கு அரக்க அம்மா என பெயரிட்டு உள்ளன.
TNN
0 comments:
Post a Comment