வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுதிகரிப்பல்ல அவர்களிற்கு நன்மை பயக்க கூடிய பாதுகாக்க கூடிய ஒரு இடப்பெயர்வாகவே அமைந்தது என்று சிறீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்கள் தனது ஊடக அறிக்கையில் தெரிவத்துள்ளார்.
இவ் ஊடக அறிக்கை மேலும் வருமாறு…
கடந்த 1990 காலப்பகுதியில் வடக்கின் யுத்த பிரதேசங்களில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை காலத்தின் தேவை கருதி தவிர்க்க முடியாத தற்காலிக இடப்பெயர்வே இதை இனச்சுத்திகரிப்பு எனக் கூறுபவர்கள் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களாகவே இருக்க முடியும். இக்காலப்பகுதியில் வடக்கில் யுத்தம் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டாலும் மன்னார், வவுனியா போன்ற நகரங்களில் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களில் முஸ்லீம் மக்கள் நிம்மதியாகவே வாழ்ந்து வந்தனர்.
இப்பகுதிகளில் தாங்கள் நினைத்ததை செய்யக்கூடிய புலனாய்வுக்கட்டமைப்புடன் இருந்த புலிகள் அங்குள்ள முஸ்லீம்களின் இருப்பிற்கு எவ்வித அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்பதனையும் இவ்வாறானவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பாரிய உயிர் இழப்புக்களையும் கொடுரங்களையும் இனப்படுகொலை அல்லது இனச்சுத்திகரிப்பு என ஜெனிவாவில் ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தமின்று உயிர்ச்சேதங்களோ, துன்புறுத்தல்களோ இன்றி அமைதியான முறையில் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டமையை இனச்சுத்திகரிப்பு என கூறுவது ஆச்சிரியமானதொன்றாகவே உள்ளது.
கடந்த 1956,1977,1983 காலப்பகுதிகளில் கொழும்பு முதல் மலையகம் வரையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் வெளியேற்றம் தொடர்பிலும் வாய்திறக்காமல் அதற்கான பொறுப்புக்கூறலை சம்மந்தப்பட்டவர்களிடம் கோராத இவர்கள் கிழக்கில் கிஸ்புல்லா போன்றவர்களது இனவாத செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பாக கடந்த பொதுத்தேர்தலின் போது கல்லடியில் இருந்த இந்து ஆலயத்தை தானே அழித்ததாக முஸ்லீம் மக்கள் மத்தியில் மார்தட்டிக்கொண்டமை தொடர்பிலும் கடந்த காலங்களில் முஸ்லீம் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட சத்துருக்கொண்டான் உள்ளிட்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்பில் முஸ்லீம் தலைமைகளிடம் பொறுப்பு கோர முன்வராத இவர்கள் முஸ்லீம் மக்களின் வெளியேற்றம் தொடர்பில் கவலைப்படுவதுடன் இதற்காக தமிழர்கள் தலைகுனிய வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
உண்மையிலேயே யாழ்ப்பாண தமிழ் மக்கள் தலைகுனியத்தான் வேண்டும். முஸ்லீம் மக்களை வெளியேற்றியதற்காக அல்ல இவர்களை போன்றவர்களிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்ததற்காக. கொழும்பில் முஸ்லீம் காங்கிரசின் தலைமையகத்திற்கு உங்களை அழைத்து மாலை அணிவித்து சிற்றுண்டியும் தந்தால் உண்டு விட்டு போன வேலையை முடித்துவிட்டு வருவதை விடுத்து முஸ்லீம் காங்கிரசின் தலைமையத்தில் வைத்து தமிழர்களையும் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திதான் பிழைப்பு நடாத்த வேண்டுமா?
வடக்கு கிழக்கில் யுத்தம் இடம் பெற்ற காலங்களில் கொழும்பில் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு தேர்தலில் தமிழ் வாக்காளர்களின் அறியாமையை பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டு செல்லும் இடங்களில் எல்லாம் தமிழர்களை காட்டிக் கொடுக்கவும் தூற்றித்திரியவும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டுமிருக்க நாங்கள் ஒன்றும் அரைகுறைத் தமிழர்கள் இல்லை வடக்கு கிழக்கு மக்களின் வலிகளையும் நியாயத்தன்மைகளையும் அறிந்திருக்காவிட்டால் கற்றுத்தருவதற்கும் இது தொடர்பில் பகிரங்க விவாதங்களை நடாத்துவதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.
இன்று வடக்கு முஸ்லீம்கள் செல்வச்செழிப்புடனும் அரச வேலை வாய்ப்புக்களுடனும் உயிர்ச்சேதங்களின்றி, அங்கவீகங்கள் இன்றி வாழ்கின்றார்கள் என்றால் அதற்கு அன்றைய வெளியேற்றமே முக்கிய காரணமாகும் தமிழீழ விடுதலைப்புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றியதன் மூலம் நன்மைகளையே செய்துள்ளனர். அல்லது தமிழ்மக்களுடன் சேர்ந்து போராட்டத்திற்கு தமிழ் முஸ்லீம் தீவிரவாதமென பெயர்சூட்டி சர்வதேசத்தின் முழு ஆதரவுடன் பேரினவாதிகள் அனைவரையும் அழித்தொழித்திருப்பார்கள்.
எனவே இவ்வாறானவர்கள் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தலைமேல் ஏற்று தமிழ், முஸ்லீம் மக்களை தூண்டிவிட்டு பிரித்தாலும் செயற்திட்டத்திற்கு நாரதர் வேலை பார்க்காமல் நல்ல தமிழனாக நடந்து கொண்டு தமிழ் முஸ்லீம் மக்களின் எதிர்காலத்தையும் நல்லிணக்கத்தையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டுமென கேட்டுக்கொள்வதோடு துரோகத்தனங்களை கைவிட்டு வாக்களித்த மக்களுக்கு உண்மையாக நடந்து கொள்வதே பொருத்தமானதும் சிறப்பானதாகவும் அமையும்.
0 comments:
Post a Comment