வெற்றிலை சின்னத்தை கொண்ட கட்சியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பொறுப்பு 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் மகிந்தராஜபக்ச அல்ல சிறுபான்மையாகிய எம்மால் தெரிவுசெய்யப்பட்ட ஜானதிகதி மைத்திரிபால சிறிசேன அவர்களே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் கே கே மஸ்தான 11,08,2015 அன்று பாலமோட்டடை கிராமத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலே அவர் இவ்வாறு தெவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
இனவாதம் மதவாதம் என்று உணர்ச்சிவச அரசியல் செய்யும் அரசியல் வாதிகளாலும் வன்னியை சேர்ந்த அமைச்சர் ஒருவராலும் மக்கள் மத்தியில் வெற்றிலைக்கு வாக்களித்தால் மகிந்தராஜபக்ச வந்துவிடுவார் என்று உண்மைக்கு புறம்பான பிராச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறிப்பிட்ட நபர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிய இக்காலத்தில் இவ்வாறன பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ வெற்றிலை சின்னமோ மகிந்தராஜபக்ச வீட்டு சொத்தல்ல பல கட்சிகளும் பலதரப்பட்ட சமூகஅமைப்பக்களும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதற்கு தற்போது நல்லாட்சியின் தலைவரே பொறுப்பானவர் அவர்தான் எமக்கும் தலைவர் இக்கட்சியில்தான் நானும் வேட்பாளராக போட்டியிடுகின்றேன் அதேபோன்றுதான் மகிந்தராஜபக்ச அவர்களும் வெற்றிலை சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகின்றார்
எனவே மக்கள் தெளிவாக இருந்து உண்மை எது பொய் எது என்பதை விளங்கிகொண்டு எதிர் வரும் 17ம் திகதி சரியானதொரு முடிவெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்
0 comments:
Post a Comment