நாடாளுமன்ற உறப்பினர்களாக தெரிவுசெய்யபடுபவர்கள் இனமத பேதம் கடந்து சேவை செய்யவேண்டும் என 2015ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளரும் தொழிலதிபருமான கே கே மஸ்தான் தமது தலைமை அலவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
வன்னியை பொறுத்தவரைக்கும் தீர்ககூடிய பிரச்சினைகள் தீர்வுகாணப்படாமல் பல உள்ளன குறிப்பாக குடியிருக்கும் காணிகளுக்கு ஆவணங்கள் வழங்கபடாமை கிராமமட்ட மக்களின் பிள்ளைகளின் கல்வியில் பின்தங்கியநிலை தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்காமை வறுமைப்பட்ட மக்களுக்குரிய அரச கொடுப்பனவுகள் சரியானமுறையில் வழங்கப்படாமை போன்ற பல பிரச்சினைகள் எமது சமுதாயத்தில் காணப்படுகின்றன இதற்க்கு உடனடியாக தீர்வு காணப்படவேன்டும்.
நூறு நாள் வேலைதிட்டம் என்பது நடுத்தர மக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் ஓரளவு பயனாக உள்ளபோதும் அடிப்படை வசதிகளற்று கிராமபுறங்களில் வாழும் மக்களை பொறுத்தவரைக்கும் ஒரு வெற்றிகர திட்டமாக கருதமுடியாது
நாடாளுமன்ற உறப்பினர்களாக தெரிவுசெய்யபடுபவர்கள் தங்களுக்குரிய மக்கள் சார்ந்த கடமைகளை சரியாகவும் நேர்மையாகவும் பணிசெய்வதுடன் சாதி மத பேதம் கடந்து சேவை செய்யவேண்டும் கடந்தகாலங்களில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கபடும்போது கல்விதராதரத்திற்கு ஏற்பவழங்கபடவில்லை இன்நிலை மாறப்பட்டு சரியானமுறையில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்
சில கிராமங்களில் வீதிகள் புனரமைக்கப்படாமலும் வீதிகள் இல்லாமலும் காணப்படுகிறது இதனால் பயணிகள் மற்றும் விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்துவதில் பல சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர் இதில் மாற்றத்தை உருவாக்கி உடனடியாக உட்கட்டுமான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேன்டுமென அவர் தெரிவித்தார்
0 comments:
Post a Comment