வவுனியா நெளுக்குளம் குகன் நகர் பகுதியிலிருந்து விபுலானந்தக் கல்லூரியில் கல்வி கற்கும் குணசேகரம் திவ்யா 19வயது என்ற மாணவி பொதுக்கிணறிலிருந்து சடலமாக நேற்று 06.08.2015; இரவு 7.30மணியளவில் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டடுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் கல்வி கற்று வந்த திவ்யா என்ற மாணவி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தர உயர்தரம் பரீட்சையில் பரீட்சை எழுதுவதற்கு தனது அனுமதி அட்டையினைப் பெறுவதற்காக பாடசாலை அதிபரிடம் சென்றுள்ளார்.
அதிபர் அனுமதி அட்டை கொழும்பிலிருந்து இரண்டு தினங்களில் வந்ததும் தருவதாக கூறியுள்ளார். இரண்டு தினங்களின் பின்னர் தாயுடன் அனுமதி அட்டையினை பெறுவதற்கு சென்றபோது அனுமதி அட்டை வந்தள்ளது அதிபர் வெளியே சென்றுள்ளார்
வந்ததும் பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது. அனுமதி அட்டையினை பெற்று வருமாறு தாய் கூறிவிட்டுச் சென்று விட்டார். திவ்யா அதிபர் வரும் வரை காத்திருந்து அனுமதி அட்டையினை கேட்டபோது உமக்கு கணிதபாடம் இல்லை எனவே அனுமதி அட்டை தரமுடியாது என்று கூறியுள்ளளார்.
மனம் உடைந்த மாணவி செய்வதறியாமல் இருந்துள்ளார்.
பிற்பகல் 3.30மணிக்கு வீடு சென்ற மாணவி தனது பாடப் புத்தகத்தில் தனக்கு பரீட்சை எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதையும் தான் குடும்பத்தினர் மீது வைத்தள்ள பற்று பாசம் என்பனவற்றையும் விபரித்து கடிதம் எழுதி வைத்த விட்டு வெளியே சென்றுள்ளார். 6மணி ஆனதும் தயார் திவ்வியாவைத் தேட ஆரம்பித்துள்ளார்.
அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளிலும் இல்லை என்றதும் உறவினர் அனைவருக்கும் தகவல் கிடைத்ததும் தேடுதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வீட்டிலிருந்து 250மீற்றர் தூரத்திலிருக்கும் பொதுக்கிணற்றடியில் திவ்யாவின் பாதணி இருந்ததையடுத்து கிணற்றுக்கள் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட திவ்யாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இறந்த விட்டதாக கூறினார்கள்.
திடீர் மரணவிசாரணை அதிகாரி மரண விசாரணையினை நடத்தி உடற்பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணையினை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment