வத்தளை, மாபோலை பிரதேசத்தைச் சேர்ந்த கோழி இறைச்சிக்கடை ஒன்றின் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் நால்வர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை பொலிஸார் முன்னெடுத்த விஷேட விசாரணைகளிலேயே நேற்று இவர்கள் நால்வரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. தனது 18 வயது மகனுடன் வணக்கஸ்தலத்திற்கு சென்று முச்சக்கரவண்டியில் திரும்பிக்கொண்டிருந்தவேளை 46 வயதான மொஹம்மட் என அறியப்படும் கோழிக் கடை உரிமையாளர் நேற்று அதிகாலை கொலை செய்யப்பட்டிருந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித் துள்ளது.
0 comments:
Post a Comment