மில்லியன் கையெழுத்து இயக்கம் தமிழகமெங்கும் வீச்சுடன் இடம்பெற்று வரும் நிலையில், அனைத்துலக நீதிமன்றத்தில் சிறிலங்காவை நிறுத்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் 13 இலட்சங்களையும் கடந்து செப்ரெம்பர் வரை உலகத் தமிழர் பரப்பெங்கும் வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் இலங்கையில் அப்பாவித்தமிழர்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி அவர்களிடம் கையளிக்கப்பட்ட மனுவில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் தெரிவித்திருந்ததாக அதிமுகவின் கொள்கைப்பரப்புச் துணைச் செயலர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைவியல் ஈழத்தமிழர் விவாகாரத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் பிரதமர் மோடி அவர்களிடம் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் நேரடியாக விளக்கியிருந்ததாக திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டை ‘நட்பு நாடு’ என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,
இலங்கை இனப் போரின் போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான, நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இந்த சர்வதேச விசாரணையின் அடிப்படையில், போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள் சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், தமிழர்கள் மீதான அடக்குமுறையை இலங்கை அரசு நிறுத்தும் வரை இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதித்திடவும், ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ‘தனி ஈழம்’ குறித்து இலங்கைவாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய வாக்கியங்கள் 2013ம் ஆண்டு தமிழக சட்டசபைத்தீர்மானத்தின் பிரதான உள்ளடக்கமாக இருக்கின்றது.
இதுஒருபுறமிருக்க, சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியில் நீதிமன்றத்தில் பாரப்படுத்த ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் தமிழகமெங்கும் முழுவீச்சும் இடம்பெற்று வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment