மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் பணிப்பாளர் வேண்டுகோள்.
மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரிற்கு பயணமாகிறார். அங்கு 6வாரங்கள் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சையினை மேற்கொள்ளவுள்ளார். எனவே அதற்குத் தேவையான செலவுகளை மேற்கொள்வதற்கு புலம் பெயர் உறவுகள் மற்றும் எமது மக்களாகிய நாம் நிதி சேகரிப்பு உதவியினை மேற்கொண்டு எமது ஆயர் அவர்களை பூரண சுகத்துடன் வரவேற்கவேண்டும் என்று மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் பணிப்பாளர் திருமதி நாளினி கிN~hகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து நாம் நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றோம். இவ் யுத்தம் காரணமாக நாம் பலரை இழந்துள்ளோம். பலர் காணாமற்போயுள்ளனர். பலர் அனாதைகள் ஆக்கப்பட்டனர். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் பலர் காணாமற்போன நேரத்திலும் மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்கள் ஆற்றிய பணியினை நாம் மறந்து விட முடியாது. யுத்தத்தினை நிறுத்த ஆயர் அவர்கள் மேற்கொண்ட அர்ப்பணிப்பு, தியாகம் யுத்த பிரதேசத்திலிருந்த மக்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.
சிவில் அமைப்புக்கள், காணமற்போனோரைக்கண்டறியும் அமைப்பு என பல அமைப்புகளுக்கு தலைமை தாங்கியதுடன் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். வெள்ளை ஆடை அணிந்த பிதாமகன் என்றே கூறவேண்டும். தமிழ்த் தேசியம் சிதைந்து விடாமல் பாதுகாத்ததையும் நாம் மறந்து விட முடியாது.
அவரின் செயற்பாடுகள், எமது சமூகத்தினை மட்டுமல்ல எமது நாட்டையே பாதுகாத்துள்ளது. வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் உட்பட அயல் நாட்டின் அரசியல் தலைமைகள் வரை ஆயரின் ஆளுமையை அறிந்துள்ளார்கள்.
எனவே ஆயர் அவர்களின் சிகிச்சைக்கான நிதியினை நாம் அனைவரும் இணைந்து நிதி சேகரிப்பினை மேற்கொண்டு ஆயர் அவர்கள் விரைவில் சுகமடையவும் பிரார்த்தனை செய்வதுடன் மன்னார் ஆயர் இல்லம் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி விக்ரர் சோசை அவருடன் 0775009440 தொலைபேசி இலக்ககத்துடன் இணைந்து நிதி சேகரிப்புக்களை மேற்கொள்ளுமாறு மனித மாண்பினைக்காக்கும் அமைப்பு சார்பாக அதன் பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment