வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு கடந்த காலங்களில் அபராதம் விதிக்கப்படாமைக்கான காரணம், 298/2005 என்ற வழக்கின் படி, அதிகமான பாதைகளில் வேக எல்லைகள் சரியான முறையில் குறிக்கப்பட்டிருக்கவில்லை என்பதனாலாகும்.
ஆனால் தற்பொழுது அதிகமான பாதைகளில் குறித்த வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment