மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியமைத்தாலும் அந்த ஆட்சியில் நாங்கள் ஒருபோதும் அமரப்போவதில்லை. அவர் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் எவ்விதத்திலும் அனுமதிக்கப் போவதுமில்லை இவ்வாறு சம்மாந்துறையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அமைத்தால் அதில் நீங்கள் இணைவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மஹிந்த ராஜபக்ஷ அறுபது ஆசனங்களுக்கு மேல் பெறமாட்டார் - பெறப்போவதுமில்லை என்பது உண்மை - உறுதி. ஆகவே, அவர் ஆட்சியமைப்பதை நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அதற்கான சாத்தியம் சற்றும் இல்லை. நாங்களே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பினோம். அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் அனுமதிக்கப்போவதுமில்லை என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
0 comments:
Post a Comment