யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக வடமராட்சி, மாலுசந்திப் பகுதியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
மாலுசந்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற போதே, இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தலைவரின் மண்ணில் தேசத் துரோகியா?' என தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த துண்டுப்பிரசுரத்தில், சுமந்திரனுக்கு வாக்களித்தால் அவர்கள் தமிழர்கள் இல்லையென்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment