மன்னார் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பான 9 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
குறித்த முறைப்பாடுகளில் எவையும் பாரதூரமானவை இல்லை எனவும் குறித்த 9 முறைப்பாடுகளும் சாதாரண முறைப்பாடுகள் என தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் 79 ஆயிரத்து 432 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்தலின் போது 70 வாக்கெடுப்பு நிலையங்களும்,7 கணக்கெடுப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது.
தேர்தல் தொடர்பான சகல விதமான வேளைத்திட்டங்களும் தற்போது இடம் பெற்று வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment